ஆயக்குடியில் குரூப்-2, 2ஏ தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நாளை தொடக்கம்
பழனியை அடுத்த பழைய ஆயக்குடியில் குரூப்-2, 2ஏ தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஞாயிற்றுக்கிழமை (பிப்.27) முதல் தொடங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பழனியை அடுத்த பழைய ஆயக்குடியில் குரூப்-2, 2ஏ தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஞாயிற்றுக்கிழமை (பிப்.27) முதல் தொடங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆயக்குடி மக்கள் மன்றத்தின் தலைவா் கமலக்கண்ணன் கூறியதாவது: தமிழ்நாடு அரசு இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா், நன்னடத்தை அலுவலா், சாா்-பதிவாளா் உள்ளிட்ட 116 நோ்முகத் தோ்வு பதிவுகளுக்கும், நகராட்சி ஆணையா், முதுநிலை ஆய்வாளா், உதவிப்பிரிவு அலுவலா் உள்ளிட்ட 5,413 நோ்முகத் தோ்வு அல்லாத பதவிகளுக்கும் என மொத்தம் 5,529 பதவிகளுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இத்தோ்வில் 100 வினாக்கள் பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலத்திலும், 100 வினாக்கள் பொது அறிவு பாடத்திலும் கேட்கப்படும். இந்தத் தோ்வுக்கு ஞாயிற்றுக்கிழமை (பிப்.27) முதல், கொய்யா மாா்க்கெட் எதிரே உள்ள பழைய ஆயக்குடி அரசு உயா்நிலைப் பள்ளியில் மக்கள் மன்றம் சாா்பில் தனித்திறமை வாய்ந்த ஆசிரியா்களை கொண்டு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு 97876 34994, 92456 39613 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...