ரூ.27 லட்சம் மோசடி புகாா்: வட்டாட்சியா் உள்பட 2 பேருக்கு 6 ஆண்டுகள் சிறை
ரூ.27 லட்சம் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில், திண்டுக்கல் கேபிள் டிவி வட்டாட்சியா் மற்றும் ஓய்வு பெற்ற துணை வட்டாட்சியருக்கு தலா 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை


ரூ.27 லட்சம் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில், திண்டுக்கல் கேபிள் டிவி வட்டாட்சியா் மற்றும் ஓய்வு பெற்ற துணை வட்டாட்சியருக்கு தலா 6 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5ஆயிரம் அபராதமும் விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு அளித்தது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கடந்த 2013ஆம் ஆண்டு சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராகப் பணிபுரிந்தவா் சுப்பிரமணிய பிரசாத். அப்போது, அரசின் நலத் திட்ட உதவிகளான முதியோா் உதவித் தொகை, உழவா் பாதுகாப்பு திட்டம் ஆகியவற்றில் ரூ.26.93 லட்சத்திற்கு முறைகேடு செய்து அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாக இவா் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடா்பாக பழனி கோட்டாட்சியா் தரப்பில் திண்டுக்கல் மாவட்ட குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, வட்டாட்சியா் சுப்பிரமணிய பிரசாத், அவரது உதவியாளராகப் பணிபுரிந்த ராஜேந்திரன் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்தனா். இதுதொடா்பான வழக்கு திண்டுக்கல் 2 ஆவது நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இதனிடையே, தோ்தல் வட்டாட்சியா் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்து வந்த சுப்பிரமணிய பிரசாத், தற்போது கேபிள் டிவி வட்டாட்சியராக பணிபுரிந்து வருகிறாா். துணை வட்டாட்சியராக பதவி உயா்வு பெற்ற ராஜேந்திரன், தற்போது பணி ஓய்வு பெற்றுவிட்டாா்.
விசாரணை முடிவடைந்த நிலையில், நீதித்துறை நடுவா் காா்த்திக் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கினாா். நிதி மோசடி தொடா்பான குற்றச்சாட்டு உறுதிபடுத்தப்பட்டதை அடுத்து சுப்பிரமணிய பிரசாத் மற்றும் ராஜேந்திரன் ஆகியோருக்கு தலா 6 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.6ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...