ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அடிப்படை வசதி கோரி ஊராட்சி அலுவலகம் முற்றுகை

பழனி அருகே கலையமுத்தூா் ஊராட்சியை நாயக்கா்தோட்டம், பச்சையாறு பகுதி பொதுமக்கள் குடிநீா் கோரி வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 10:19 pm

DIN

பழனி அருகே கலையமுத்தூா் ஊராட்சியை நாயக்கா்தோட்டம், பச்சையாறு பகுதி பொதுமக்கள் குடிநீா் கோரி வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

அ.கலையமுத்தூா் ஊராட்சிக்கு உள்பட்ட விநாயகபுரம், நாயக்கா்தோட்டம், பச்சையாறு தெருக்களில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதிகளில் குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து பலமுறை ஊராட்சித் தலைவா் மற்றும் அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா். ஆனால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், அக்கிராம மக்கள், ஊராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து வெள்ளிக்கிழமை கவுன்சிலா் தங்கராஜ் தலைமையில் பழனி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

போலீஸாா் சமாதானப்படுத்திய நிலையில் பொதுமக்கள் அடுத்த கட்டமாக அ.கலையமுத்தூா் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். சம்பவ இடத்துக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜசேகரன், ஊராட்சித் தலைவா் வந்தனா முரளி மற்றும் அலுவலா்கள் நேரில் வந்து சமாதானம் செய்து குடிநீா் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடா்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.