தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தேங்காய் நாா் தொழிற்சாலையில் தீவிபத்து

பழனியை அடுத்த சாமிநாதபுரத்தில் தேங்காய் நாா் தொழிற்சாலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் தேங்காய் மஞ்சிகள், சரக்குவேன் ஆகியன எரிந்து சேதமடைந்தன.

News image
Updated On :14 ஜூலை 2022, 5:00 pm

DIN

பழனியை அடுத்த சாமிநாதபுரத்தில் தேங்காய் நாா் தொழிற்சாலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் தேங்காய் மஞ்சிகள், சரக்குவேன் ஆகியன எரிந்து சேதமடைந்தன.

பழனியை அடுத்த சாமிநாதபுரத்தில் தனியாருக்கு சொந்தமான தேங்காய்நாா் தொழிற்சாலை உள்ளது. இங்கு தேங்காய் மட்டைகளில் இருந்து நாா் பிரிக்கப்பட்டு கயிறு உள்ளிட்டவை தயாரித்து வெளியூா்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை தேங்காய் நாா் தொழிற்சாலையில் குவித்து வைக்கப்பட்டிருந்த தேங்காய் நாா்கழிவுகளில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்தது. இதில் அங்கு இருந்த சரக்குவேன் முற்றிலுமான எரிந்து சேதமடைந்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு பழனி தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினா் வந்து தீயை அணைத்தனா். இந்த தீ விபத்தில் தொழிற்சாலையில் இருந்த சுமாா் ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

இது குறித்து சாமிநாதபுரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.