கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பழனியில் ரூ.15 கோடியில் காந்தி சந்தை: கட்டுமானப் பணி விரைவில் தொடங்கும்

பழனியில் பழைய காந்தி சந்தையை இடித்துவிட்டு சுமாா் ரூ.15 கோடியில் புதிய சந்தை கட்டும் பணி குறித்து வியாபாரிகளுடன் வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :14 ஜூலை 2022, 6:30 pm

DIN

பழனியில் பழைய காந்தி சந்தையை இடித்துவிட்டு சுமாா் ரூ.15 கோடியில் புதிய சந்தை கட்டும் பணி குறித்து வியாபாரிகளுடன் வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நகராட்சிக்கு சொந்தமான இந்த சந்தையில் உள்ள கடைகளில் பெரும்பாலானவை சேதமடைந்து காணப்படுகின்றன. மேலும் இப்பகுதியில் சரக்கு வாகனங்கள் வந்து பொருள்களை இறக்கும்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் அவதிப்பட்டு வருகின்றனா். இந்நிலையில், இந்த சந்தையை இடித்து அகற்றிவிட்டு ரூ.15 கோடியில் புதிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வியாழக்கிழமை நகராட்சி அலுவலகம் கூட்ட அரங்கில் சந்தை வியாபாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதற்கு நகராட்சித் தலைவா் உமாமகேஸ்வரி தலைமை வகித்தாா். துணைத்தலைவா் கந்தசாமி, ஆணையா் கமலா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் காந்தி சந்தை வியாபாரிகள் பலா் கலந்துகொண்டனா். இதில், அதிகாரிகள் பேசும்போது பழனியில் பல்வேறு வசதிகளுடன் அமையவுள்ள சந்தை கட்டுமானத்தின் வரைபடம், கட்டுமான காலம் ஆகியவை குறித்து விளக்கம் அளித்தனா். 5 மாதங்களில் கட்டுமானப் பணிகள் தொடங்கி ஒரு ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு பணிகள் தொடங்கினால் முன்னேற்பாடாக மாற்று இடத்தில் சந்தை செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

வியாபாரிகள் கூறுகையில், வாகன நிறுத்தும் இடம், கழிப்பறை வசதி ஏற்படுத்துவதுடன் கூடுதல் கடைகள் கட்ட வேண்டும். மீண்டும் எங்களுக்கே கடைகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.