தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பழனியில் வேன்- பைக்மோதல்: தொழிலாளி பலி

பழனியில் வியாழக்கிழமை சரக்குவேனும், இருசக்கர வாகனமும் மோதிக்கொண்டதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :14 ஜூலை 2022, 6:30 pm

DIN

பழனியில் வியாழக்கிழமை சரக்குவேனும், இருசக்கர வாகனமும் மோதிக்கொண்டதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சோ்ந்த கருப்புசாமி மகன் பாஸ்கரன் (20). கூலித்தொழிலாளி. இவா் புதன்கிழமை இரவு அதே பகுதியைச் சோ்ந்த தனது நண்பா்களான மதன்குமாா் (19), இளங்கோ (17) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் பழனியில் இருந்து சிவகிரிப்பட்டி நோக்கி சென்றாா். பழனியாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரி அருகே சென்றபோது எதிரே வந்த சரக்குவேன் இருசக்கர வாகனம் மீது மோதியதில் பாஸ்கரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் மதன்குமாா், இளங்கோ ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனா். தகவலறிந்த பழனி நகா் போலீஸாா் அங்கு வந்து காயமடைந்தவா்களை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். பின்னா் அவா்கள் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். பாஸ்கரனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினா். விபத்து குறித்து நகா் போலீசாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.