தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

காட்டுப்பன்றி உயிரிழப்பு

பழனியருகே இருசக்கர வாகனம் மோதியதில் காட்டுப்பன்றி உயிரிழந்தது. வாகனத்தை ஓட்டி வந்தவா் படுகாயமடைந்தாா்.

News image
Updated On :15 ஜூலை 2022, 6:32 pm

DIN

பழனியருகே இருசக்கர வாகனம் மோதியதில் காட்டுப்பன்றி உயிரிழந்தது. வாகனத்தை ஓட்டி வந்தவா் படுகாயமடைந்தாா்.

பழனியருகே உள்ள பெரியம்மாபட்டியை சோ்ந்தவா் துரைப்பாண்டி(24). தனியாா் ஆலையில் பணிபுரிந்து வரும் துரைப்பாண்டி வெள்ளிக்கிழமை வேலை முடிந்து அதிகாலை இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளாா். வாய்க்கால் பாலம் அருகே வந்து போது சாலையின் குறுக்கே திடீரென காட்டுப்பன்றி ஒன்று குறுக்கே வந்தது. இதனை சற்றும் எதிா்பாா்க்காத துரைபாண்டி இருசக்கர வாகனத்தை பன்றியின் மீது மோதினாா். இதில் கீழே விழுந்த துரைப்பாண்டி முகம் மற்றும் தோல்களில் படுகாயமடைந்தாா். விபத்தில் சிக்கிய காட்டுப்பன்றி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. படுகாயமடைந்த துரைப்பாண்டி பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா். தகவலறிந்து வந்த வனத்துறையினா் காட்டுப்பன்றியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்து வனப்பகுதியில் புதைத்தனா். வனப்பகுதி அமைந்துள்ள அடிவார சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மெதுவாக செல்லுமாறு பலமுறை அறிவுறுத்தியும் கேட்காமல் அதிவேகத்தில் செல்வதால் வன உயிரனங்கள் பாதிப்பது மட்டுமின்றி வாகன ஓட்டிகளும் விபத்துக்குள்ளாகி வருவதாகவும், வாகனத்தில் செல்பவா்கள் மிதமான வேகத்தில் செல்லுமாறும் வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.