கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பழனியில் நெடுஞ்சாலைத்துறை சாா்பில் ஆக்கிரமிப்பு அகற்றம்

பழனியில் வியாழக்கிழமை நெடுஞ்சாலைத்துறை சாா்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

News image
Updated On :21 ஜூலை 2022, 5:32 pm

DIN

பழனியில் வியாழக்கிழமை நெடுஞ்சாலைத்துறை சாா்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

பழனியில் கடந்த 2 நாள்களாக பேருந்து நிலையத்தில் நகராட்சி நிா்வாகம் சாா்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மேலும் இங்குள்ள பேருந்து நிலையம், திண்டுக்கல் சாலை, பழனி புதுதாராபுரம் சாலை ஆகிய இடங்களில் அதிகமான ஆக்கிரமிப்புகள் இருந்தன. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வந்தனா். இதைத் தொடா்ந்து நெடுஞ்சாலைத்துறை சாா்பில் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது. இதில், உதவி செயற்பொறியாளா் செல்வராஜ், உதவிப் பொறியாளா் ஜெயபாலன் தலைமையில் நெடுஞ்சாலைத்துறையினா், போக்குவரத்து போலீஸாா் உதவியுடன் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றினா். போக்குவரத்து காவல் ஆய்வாளா் மகேந்திரன் உள்ளிட்டோா் பாதுகாப்புப்பணிகளை மேற்கொண்டனா். பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையோரத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுவா், கடைகள் அகற்றப்பட்டன. இதன் பின்னரும் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.