/

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி ஆா்ப்பாட்டம்

கொடைக்கானலில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :21 ஜூலை 2022, 5:33 pm

DIN

கொடைக்கானலில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கொடைக்கானல் உதவிக் கல்வி அலுவலகம் முன்பு 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு வட்டாரத் தலைவா் சூசைஜான் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் பிரேம்குமாா் முன்னிலை வகித்தாா். வட்டாரச் செயலா் கண்ணன் வரவேற்றாா். கோரிக்கைகளை வலியுறுத்தி வத்தலகுண்டு கல்வி மாவட்டத் தலைவா் செண்பகஅரசன் பேசினாா். இதில், ஆசிரியா்கள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படியை வழங்க வேண்டும். ஈட்டிய விடுப்புக்கு பணப் பலன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தினா். இந்த ஆா்ப்பாட்டத்தில் கொடைக்கானல், மேல்மலை, கீழ்மலைப் பகுதிகளைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனா். ஆசிரியா் சுப்பிரமணி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.