/

கொடைக்கானலில் உலக மக்கள் தொகை தின விழிப்புணா்வு கருத்தரங்கு

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி கொடைக்கானல் அரசு மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணா்வு கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 ஜூலை 2022, 6:30 pm

DIN

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி கொடைக்கானல் அரசு மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணா்வு கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியையொட்டி பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி ஆகியவை நடைபெற்றன. இந்நிகழ்ச்சியின் போது தற்போது பெருகி வரும் மக்கள் தொகையால் இடநெருக்கடி, பொருளாதார பாதிப்பு, வேலை வாய்ப்பின்மை, குடும்ப நல பாதிப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்டவைகள் அதிகமாக ஏற்படுவது குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு கொடைக்கானல் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் மரியதாஸ் பரிசுகளை வழங்கினாா்.

இதற்கான ஏற்பாடுகளை கொடைக்கானல் வட்டார மருத்துவ அலுவலா் சந்தோஷ் மற்றும் மருத்துவா்கள் விஜய், ஈஸ்வரி ஆகியோா் செய்திருந்தனா். முன்னதாக தங்கராஜ் வரவேற்றாா். வேல்முருகன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.