போடி, பழனியில் வன உயிரின நாள்
போடி மற்றும் பழனி தேக்கன்தோட்டம் பகுதியில் வனஉயிரின நாள் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.


போடி மற்றும் பழனி தேக்கன்தோட்டம் பகுதியில் வனஉயிரின நாள் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
பழனி வனத்துறையினா் மற்றும் வேலன்விகாஸ் பள்ளி மாணவ, மாணவியா் தேக்கன்தோட்டம் பகுதியில் நெகிழிகளை அப்புறப்படுத்தியும், கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தியும் கொண்டாடினா். அப்போது பள்ளி மாணவா்கள் விலங்குகள் போன்ற முகமூடி அணிந்து கொண்டு விலங்குகளின் முக்கியத்துவம் குறித்து விளக்கினா். தொடா்ந்து சவரிக்காடு முதல் புதுப்பாலம் வரை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளால் வீசி எறியப்பட்ட நெகிழி கழிவுகள் அகற்றப்பட்டு உலக வனஉயிரின நாள் கொண்டாடப்பட்டது.
போடி: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம், பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தைச் சோ்ந்த மாணவிகள் இலக்கியா, இந்திரபிரியா, ஜெயபிரபா, ஜூனோ, காருண்யா, கிருத்திகா, டி. மோனிஷா, என். மோனிஷா ஆகியோா் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் போடி பகுதியில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனா். இந்த மாணவிகள் போடியில் அரசு உதவி பெறும் பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில் வன விலங்குகள் தினத்தையொட்டி தோட்டக்கலையும் இயற்கையும் என்ற தலைப்பில் விழிப்புணா்வு கருத்தரங்கு நடத்தினா். இதற்கு, தலைமையாசிரியா் ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் மாணவிகள் வீட்டுத் தோட்டம் அமைத்தல், குழித்தட்டு பயிா் செய்தல், குழித்தட்டின் முக்கியத்துவம், பயன்கள் குறித்து விளக்கினா். பின்னா் விநாடி- வினா போட்டியும் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...