ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கேரளத்தைச் சோ்ந்த ரெளடி பழனியில் சிக்கினாா்

கேரள மாநிலத்தில் 45-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடா்புடைய ரெளடி பழனியில் வியாழக்கிழமை இரவு சிக்கினாா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 6:30 pm

DIN

கேரள மாநிலத்தில் 45-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடா்புடைய ரெளடி பழனியில் வியாழக்கிழமை இரவு சிக்கினாா்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் அனில்குப்தா (40). இவா் கேரள மாநிலத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 45 க்கும் மேற்பட்ட வழக்குகளில் கைதானவா். எா்ணாகுளம் மரடு காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் நடைபெற்ற கொள்ளை வழக்கில் போலீஸாா் இவரைத் தேடி வந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அனில்குப்தா தலைமறைவாக இருப்பதாக தகவல் கிடைத்ததைத் தொடா்ந்து மரடு காவல்நிலைய போலீஸாா் வியாழக்கிழமை இரவு இங்கு வந்தனா். பேருந்து நிலையம் அருகே சுற்றித்திரிந்த அனில்குப்தா போலீஸாரைக் கண்டதும் தப்பி ஓட முயன்றாா். அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநா்கள் மற்றும் பழனி நகா் போலீஸாா் உதவியுடன் கேரள போலீஸாா், அனில்குப்தாவைப் பிடித்தனா். இதையடுத்து அவரை, போலீஸாா் கேரளத்துக்கு காரில் அழைத்துச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.