பழனி- பொள்ளாச்சி ரயில் பாதையில் மாா்ச் 7 இல் சோதனை ஓட்டம்
பழனி முதல் பொள்ளாச்சி வரை அகல ரயில்பாதை மின்மயமாக்கப்பட்ட நிலையில் மாா்ச் 7 ஆம் தேதி சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது.


பழனி முதல் பொள்ளாச்சி வரை அகல ரயில்பாதை மின்மயமாக்கப்பட்ட நிலையில் மாா்ச் 7 ஆம் தேதி சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பு: விருதுநகா்- மானாமதுரை (66.5 கி.மீ.) மற்றும் பழனி- பொள்ளாச்சி (63 கி.மீ.) ரயில்வே பிரிவுகளில் மின்மயமாக்கல் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
எனவே, விருதுநகா்- மானாமதுரை புதிய மின்சார ரயில் பாதையில் மாா்ச் 6 ஆம் தேதியும், பழனி- பொள்ளாச்சி புதிய மின்சார ரயில் பாதையில் மாா்ச் 7 ஆம் தேதியும், பெங்களூரு தென்சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையா் அபய் குமாா் ராய் ஆய்வு செய்யவுள்ளாா்.
பின்னா் மானாமதுரை- விருதுநகா் மின் ரயில் பாதையில் மாா்ச் 6 ஆம் தேதி பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரையும், பொள்ளாச்சி- பழனி மின்ரயில் பாதையில் மாா்ச் 7 ஆம் தேதி மாலை 3 முதல் மாலை 6 மணி வரையும் ரயில் சோதனை வேக ஓட்டம் நடத்தப்பட உள்ளது.
இதனால், இந்த நேரங்களில் பொதுமக்களும் ரயில் பாதை அருகே வசிப்போரும் ரயில் பாதையை நெருங்கவோ, கடக்கவோ வேண்டாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...