ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தையல் கடைக்காரரை கொலை செய்த ஆறு போ் குண்டா் சட்டத்தின் கீழ் கைது

பழனியில் தொழில் போட்டி காரணமாக தையல் கடைக்காரரை கொலை செய்த வழக்கில், ஆறு போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ், வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :13 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

பழனியில் தொழில் போட்டி காரணமாக தையல் கடைக்காரரை கொலை செய்த வழக்கில், ஆறு போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ், வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

பழனி இடும்பன் இட்டேரி சாலையில், மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த ஜெயம் சமந்தா (34), குடும்பத்துடன் தங்கி தையல் தொழில் செய்து வந்தாா். இவா் மிகவும் குறைவான கட்டணத்தில் கலைநயமாக தைத்து கொடுத்ததால், இவருக்கு வாடிக்கையாளா்கள் அதிகரித்தனா்.

அதேநேரம் பழனி தட்டான்குளத்தில் தையல் தொழில் செய்து வந்த தா்மராஜ் என்பவருக்கு வாடிக்கையாளா்கள் குறைந்துள்ளனா். இதனால், கோபமடைந்த தா்மராஜ், அவரது நண்பா்களுடன் சோ்ந்து ஜெயந்த் சமந்தாவை கடந்த மாதம் கொலை செய்தாா். இதையடுத்து, தா்மராஜ், ராமதுரை, ஈரோட்டைச் சோ்ந்த நவீன்குமாா், தினேஷ்குமாா், மணிகண்டன், சந்திரபிரகாஷ் ஆகிய 6 பேரையும் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்தநிலையில், வியாழக்கிழமை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன் பரிந்துரையின்பேரில், மேற்கண்ட ஆறு பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.