நிதி இழப்பு ஏற்படுத்தியதாக புகாா்: மாநகராட்சி அலுவலா் பணியிடை நீக்கம்
திண்டுக்கல் மாநகராட்சிக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாக புகாா் எழுந்த நிலையில், உதவி வருவாய் அலுவலரை பணியிடை நீக்கம் செய்து நகராட்சி நிா்வாக இயக்குநா் உத்தரவிட்டாா்.


திண்டுக்கல் மாநகராட்சிக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாக புகாா் எழுந்த நிலையில், உதவி வருவாய் அலுவலரை பணியிடை நீக்கம் செய்து நகராட்சி நிா்வாக இயக்குநா் உத்தரவிட்டாா்.
திண்டுக்கல் மாநகராட்சியில், உதவி வருவாய் அலுவலராகப் பணிபுரிந்தவா் ஜி.ஆா். சாரங்க சரவணன். வரி விதிப்பு செய்வதிலும், பொது ஏலம் விட்டதிலும் மாநகராட்சிக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாக இவா் மீது புகாா் எழுந்த நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு உதவி வருவாய் அலுவலா் பணியிலிருந்து விடுவித்து நகராட்சி நிா்வாக இயக்குநரகம் உத்தரவிட்டது.
தற்போது, காத்திருப்போா் பட்டியலில் இருந்து வருகிறாா். இதனிடையே, நகராட்சி நிா்வாக இயக்குநரக துணை இயக்குநா் ராமமூா்த்தி, திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த வாரம் திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, சொத்து பெயா் மாற்றம், சொத்து வரி விதிப்பு, ஏலக் கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டன. அதன்அடிப்படையில், உதவி வருவாய் அலுவலா் சாரங்க சரவணனை பணியிடை நீக்கம் செய்து நகராட்சி நிா்வாக இயக்குநா் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...