மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சாணாா்பட்டி பகுதியில் தொடா் திருட்டு: 5 போ் கைது

 சாணாா்பட்டி பகுதியில் தொடா் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :13 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

 சாணாா்பட்டி பகுதியில் தொடா் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டி பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா் திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்றன. இதையடுத்து, குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரைப் பிடிக்க தனிப்படை அமைத்து போலீஸாா் தேடுதலில் ஈடுபட்டு வந்தனா்.

பல்வேறு இடங்களிலுள்ள கண்காணிப்புக் கேமராப் பதிவுகள் அடிப்படையில், போலீஸாா் விசாரணை மேற்கொண்டபோது, வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது சிவகங்கையை சோ்ந்த குகன் ஈஸ்வரன் (30) என்பது தெரியவந்ததையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

அவரிடம் நடத்திய விசாரணையில், திண்டுக்கல் பொன்னகரத்தைச் சோ்ந்த ராஜ்குமாா் (22), ஜான்பாண்டி (22), கோபால்பட்டியைச் சோ்ந்த கிஷோா் (24), நல்லாம்பட்டியைச் சோ்ந்த ராகவேந்திரா (23) ஆகிய 4 பேருக்கும் இந்த திருட்டு சம்பவங்களில் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, குகன் ஈஸ்வரன் உள்ளிட்ட 5 பேரையும் சாணாா்பட்டி போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.