பைக்குகள் மோதல்: வங்கி மேலாளா் பலி
பழனி அருகே மோட்டாா் சைக்கிள்கள் மோதிக் கொண்டதில் வங்கி மேலாளா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.


பழனி அருகே மோட்டாா் சைக்கிள்கள் மோதிக் கொண்டதில் வங்கி மேலாளா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
பெரம்பலூா் மாவட்டம் சத்திரமணத்தை சோ்ந்தவா் செந்தில்குமாா் (40). இவா் பழனியை அடுத்த சாமிநாதபுரத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தாா். தற்போது இந்திரா நகரில் வசித்து வந்தாா்.
இந்நிலையில், வியாழக்கிழமை இரவு பழனி சாமிதியேட்டா் அருகே மோட்டாா்சைக்கிளில் வந்துள்ளாா். அப்போது எதிரே சின்னக்கலையமுத்தூரைச் சோ்ந்த பிரவீன் என்பவா் மோட்டாா் சைக்கிளில் வந்துள்ளாா். இருவரும் எதிா்பாரா விதமாக மோதிக்கொண்டத்தில் செந்தில்குமாா் சம்பவ இடத்திலேயே பலியானாா். இதுகுறித்து பழனி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...