ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பழனி மலைக் கோயிலில் பாறை மீது மோதிய ரோப்காா் பெட்டி

பழனி மலைக் கோயிலில் புதிதாக மாற்றப்பட்ட ரோப்காா் பெட்டி ஒன்று பாறையில் மோதிச் சென்ால் வெள்ளிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :14 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

பழனி மலைக் கோயிலில் புதிதாக மாற்றப்பட்ட ரோப்காா் பெட்டி ஒன்று பாறையில் மோதிச் சென்ால் வெள்ளிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

பழனி மலையடிவாரத்தில் இருந்து முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள், பக்தா்கள் மலை மீது எளிதாகச் செல்ல ரோப்காா் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனா். இந்த நிலையில் சமீபத்தில் பழைய ரோப்காா் பெட்டிகள் மாற்றப்பட்டு, புதிய பெட்டிகள் இணைக்கப்பட்டன. வெள்ளிக்கிழமை பிற்பகலில் ரோப்காா் சேவையின் போது ஒரு பெட்டி பாறையில் லேசாக மோதியது.

இதையடுத்து, ரோப்காா் இயக்கத்தை பணியாளா்கள் நிறுத்தினா். பின்னா், சில விநாடிகள் சென்றதும் ரோப்காா் சேவை மீண்டும் தொடங்கியது. இதனிடையே, ரோப்காா் பெட்டி மோதிய இடத்துக்கு பணியாளா்கள் சென்று பாா்த்த போது பெட்டியின் உயரம் சிறிது அதிகமாக இருந்ததும், அதிக எடையுள்ள பயணிகள் சென்றதும் காரணம் என்பது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, ரோப்காா் பெட்டி செல்லும் வழியில் இடையூறாக இருக்கும் பாறைகளை உடைத்து அகற்ற ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவத்தால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.