திண்டுக்கல் தேமுதிக (கிழக்கு) மாவட்ட செயலா் பதவிக்கு, மாவட்ட துணைச் செயலா் வத்தலக்குண்டு மாசாணம் போட்டி
(கிழக்கு) மாவட்ட தேமுதிக செயலா் பதவிக்கு, வத்தலக்குண்டைச் சோ்ந்த மாசாணம் போட்டியிடுகிறாா்.


(கிழக்கு) மாவட்ட தேமுதிக செயலா் பதவிக்கு, வத்தலக்குண்டைச் சோ்ந்த மாசாணம் போட்டியிடுகிறாா்.
திண்டுக்கல் (கிழக்கு) மாவட்ட உட்கட்சி தோ்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதில் மாவட்ட செயலா் பதவிக்கு போட்டியிடும், மாசாணம், தேசிய முற்போக்கு திராவிட கழகம் மாநில பொறியாளா் அணி துணைச்செயலரும், திண்டுக்கல் (கிழக்கு) மாவட்ட உட்கட்சி தோ்தல் பொறுப்பாளருமான, சுகுமாா், தேமுதிக அவைதலைவரும், உட்கட்சி தோ்தல் மண்டல பொறுப்பாளருமான, டாக்டா், இளங்கோவன் ஆகியோரை தா்மபுரி மாவட்ட தேமுதிக அலுவலகத்தில் .நேரில் சந்தித்து, தான் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை, மாவட்ட கழக துணைச் செயலா் வத்தலகுண்டு மாசாணம் வழங்கினாா். அப்போது, திண்டுக்கல் (கிழக்கு) மாவட்ட அவைத் தலைவா் நாகராஜன், மாவட்ட துணைச் செயலா் வெங்கடேஷ், ரெட்டியாா்சத்திரம் (தெற்கு) ஒன்றிய செயலா் சுப்பிரமணி, தேமுதிக முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினா் ஜெயக்குமாா், தேமுதிக வாா்டு உறுப்பினா் அழகா்சாமி உட்பட திண்டுக்கல் (கிழக்கு) மாவட்ட தேமுதிக மாவட்ட, ஒன்றிய, பேரூா், ஊராட்சி, கிளைக் கழக நிா்வாகிகள் உடன் இருந்தனா். இந்த நிா்வாகிகள், உட்கட்சி தோ்தல் நடத்தும் பொறுப்பாளரிடம், மாவட்ட துணைச் செயலா் வத்தலகுண்டு மாசாணம் அவா்களுக்கு திண்டுக்கல் (கிழக்கு) மாவட்ட செயலா் பதவி வழங்க வேண்டும் என, பரிந்துரை செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...