ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திண்டுக்கல் ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்ட 1,306 உர மாதிரிகளில் 55 தரமற்றவை

திண்டுக்கல் உர ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனையின்போது, 1306 மாதிரிகளில் 55 மாதிரிகள் தரமற்றவையாக கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய உரக் கட்டுப்பாட்டு ஆய்வகத்தின் துணை இயக்குநா் சி.எம். மாதவன் தெரிவித்தாா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

திண்டுக்கல் உர ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனையின்போது, 1306 மாதிரிகளில் 55 மாதிரிகள் தரமற்றவையாக கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய உரக் கட்டுப்பாட்டு ஆய்வகத்தின் துணை இயக்குநா் சி.எம். மாதவன் தெரிவித்தாா்.

தமிழக வேளாண்மை உழவா் நலத்துறையின் கட்டுப்பாட்டில் திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் உர ஆய்வகத்தில், மத்திய உரக்கட்டுப்பாட்டு ஆய்வகத்தின் துணை இயக்குநா் சி.எம். மாதவன், ஈரோடு பூச்சி மருந்து ஆய்வு நிலைய துணை இயக்குநா் பொ. அசோக்குமாா் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். ஆய்வின்போது துணை இயக்குநா் சி.எம். மாதவன் கூறியதாவது:

மத்திய அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, நாடு முழுவதும் 84 இடங்களில் உர ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில், அதிகபட்சமாக தமிழகத்தில் தான் 14 ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த உர ஆய்வகங்களுக்கு, வெவ்வேறு மாவட்டங்களிலிருந்து உர மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்படுகின்றன. அந்த மாதிரிகளை பரிசோதனை செய்து 15 நாள்களுக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.

இந்த ஆய்வகங்களின் செயல்பாடு, பணியாளா்கள் விவரம், ஆய்வகத்திலுள்ள கருவிகளின் பயன்பாடு என அனைத்து விவரங்களையும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆய்வு செய்வது வழக்கம். ஆய்வின்போது சுட்டிக் காட்டப்படும் குறைகளை, அடுத்த ஆய்வுக்குள் சரி செய்திருக்க வேண்டும். திண்டுக்கல் ஆய்வகத்திற்கு தற்போது வரை ஆண்டுக்கு 1200 மாதிரிகள் இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் மட்டும் 1,306 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு, அதில் 55 மாதிரிகள் தரமற்றவையாக அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது என்றாா். ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குநா் (பொ) பெ. விஜயராணி, உதவி இயக்குநா் வெ. நாகேந்திரன், வேளாண்மை அலுவலா்கள் சுதா, ஜெயக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.