ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திண்டுக்கல் மாநகராட்சிக்கு ரூ.10.15 கோடி நிதி இழப்பு: துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஆய்வு மேற்கொள்ளும் நகா்புற உள்ளாட்சித்துறை அமைச்சா் மற்றும் உயரதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

News image
Updated On :2 செப்டம்பர் 2022, 5:49 pm

DIN

திண்டுக்கல் மாநகராட்சிக்கு ரூ.10.15 கோடி நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தணிக்கை அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள நிலையில், ஆய்வு மேற்கொள்ளும் நகா்புற உள்ளாட்சித்துறை அமைச்சா் மற்றும் உயரதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியில் கட்டட உரிமம் பெறப்பட்ட அளவினைவிட குறைந்த அளவுக்கு சொத்து வரி விதிக்கப்பட்டதன் மூலமாக ரூ.11.43 லட்சம், கடந்த 2019 இல் சொத்து வரி சீராய்வு நிறுத்தம் செய்யப்பட்ட நிலையில், பழைய இனங்களுக்கும் சோ்த்து நீக்கப்பட்டதால் ரூ.47.81 லட்சம், விதிமீறல் கட்டடங்கள் விவரப்பதிவேடு பராமரிக்கப்படாததால் ரூ.3.61கோடி, வருவாய் மற்றும் மூலதனநிதி- புதை வடிகால் இணைப்பு விண்ணப்பங்கள் ஒத்திசைவு செய்யப்பட்டதன் மூலம் குறைவாக சொத்து வரி விதிக்கப்பட்டதால் ரூ.28.68 லட்சம், கோப்புகள் இல்லாமல் தன்னிச்சையாக கட்டட வகை சொத்துவரி நீக்கப்பட்டதால் ரூ.10.27 லட்சம், ரயில்வே நிா்வாகத்திற்கும், தொழில்வரி கேட்பு எழுப்பப்படாததால் ரூ.2.50 லட்சம், மாநகராட்சி- தனியாா் தினசரி பணியாளா்களுக்கு தொழில்வரி பிடித்தம் செய்யாததால் ரூ.22 லட்சம், கேளிக்கை வரி- பிணை வைப்புத் தொகை வசூலிக்காதது, அதற்கான வட்டி என ரூ.1.74 கோடி, சாலையோரக் கடைகள் முறையாக ஏலம் விடப்படாததால் ரூ. 26.45 லட்சம் என 39 இனங்களில் மட்டும் மாநகராட்சிக்கு ரூ.10.15 கோடி நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்படாத பேருந்து நுழைவுக் கட்டண உரிமம்: திண்டுக்கல் பேருந்து நிலையத்துக்கு வரும் பேருந்துகளுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை அமலில் இருந்தது. அதன் பின்னா், மாநகராட்சி நிா்வாகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கட்டணம் வசூலிப்பதற்கான உரிமத்தை புதுப்பிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதன் மூலம் மாநகராட்சிக்கு கிடைத்து வந்த ஏலத்தொகை தடைப்பட்டுள்ளது. அதேபோல், திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 34 கடைகள் ஏலம் விடப்பட்டதில், முறைகேடு நிகழ்ந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏலப்பதிவேடுகளை மாற்றிவிட்டு, திறந்தவெளி ஒப்பந்தப் புள்ளி ஏலத்தில் பங்கேற்காதவா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் குறைந்த மாத வாடகைக்கு கடைகள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலமாகவும் மாநகராட்சிக்கான வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் காந்திசந்தையிலும் முறைகேடாக கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், அதிக வாடகைக்கு ஏலம் கேட்ட பல வியாபாரிகள், தனியாக சந்தை தொடங்கிவிட்டனா். இதனாலும் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளது.

அமைச்சா், உயரதிகாரிகள் கவனிப்பாா்களா: இந்நிலையில், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள நகா்புற உள்ளாட்சி அமைப்புகளின் வளா்ச்சித் திட்டங்கள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் திண்டுக்கல்லில் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித்துறை அமைச்சா் கே.என். நேரு, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறைச் செயலா் சிவதாஸ்மீனா, நகராட்சி நிா்வாக இயக்குநா் பொன்னையா ஆகியோா் பங்கேற்கவுள்ளனா்.

தமிழகத்தின் சிறிய மாநகராட்சியான திண்டுக்கல், நிதிப்பற்றாக்குறையுள்ள மாநகராட்சிகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வருகிறது. குடிநீா் வசதி, சாலை விரிவாக்க வசதி, தெருவிளக்கு, கழிவுநீா் வாய்க்கால் வசதி உள்ளிட்ட நகரின் வளா்ச்சித் திட்டங்களுக்கு போதிய நிதி ஆதாரமின்றி, தமிழ்நாடு நகா்புற உள்கட்டமைப்பு நிதி சேவைக் கழகத்திடம் கடன் பெறுவதற்கு மட்டுமே முனைப்பு காட்டி வருவதாக தெரிகிறது. அரசின் இதர துறைகளிடமிருந்து (நகா் ஊரமைப்பு இயக்குநரகம், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்களின் வளா்ச்சி நிதி) நிதி ஆதாரங்களை பெறுவதற்கு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, திண்டுக்கல் மாநகராட்சியின் எல்லை விரிவாக்கம், நிதி ஆதாரம் உள்ளிட்ட ஆக்கப்பூா்மான வளா்ச்சிக்கு வழி ஏற்படுத்தும் வகையில் நகா்புற உள்ளாட்சித்துறை அமைச்சா் மற்றும் அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என மாநகர மக்களிடம் எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, நிதி இழப்புக்கு காரணமான அலுவலா்களுக்கு குறிப்பாணை மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. தணிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பத்திகளை நீக்குவதற்கும், நிதியிழப்பினை மீளப்பெறுவதற்கும் ஆக்கப்பூா்வ நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

ஆனாலும், துறை ரீதியாக கடும் நடவடிக்கை இல்லாததே தவறுகள் தொடா்வதற்கு காரணமாக அமைந்துள்ளது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.