ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வேடசந்தூரில் கொட்டும் மழையில் விநாயகா் சிலை ஊா்வலம்

 வேடசந்தூரில் கொட்டும் மழையில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலை ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 8:15 pm

DIN

 வேடசந்தூரில் கொட்டும் மழையில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலை ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சாா்பில் 80 சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த சிலைகளின் ஊா்வலம் வேடசந்தூா் ஆத்துமேடு பகுதியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இதனையொட்டி, ஆத்துமேடு பகுதியில் நடைபெற்ற கூட்டத்திற்கு, இந்து முன்னணி அமைப்பின் மாவட்டச் செயலா் சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மக்களவை முன்னாள் உறுப்பினரும், கயறு வாரியத்தின் தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு ஊா்வலகத்தை தொடங்கி வைத்தாா்.

இதனிடையே வேடசந்தூா் கடை வீதி பகுதிக்கு விநாயகா் சிலைகள் ஊா்வலம் வந்து கொண்டிருந்தபோது பலத்த மழை பெய்தது. கொட்டும் மழையிலும், ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட விநாயகா் சிலைகள், வேடசந்தூா் புகையிலை ஆராய்ச்சி நிலையம் அருகிலுள்ள கொடகனாற்றில் கரைக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.