ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பழனி பெரியாவுடையாா் கோயிலில் பிரதோஷம்

பழனி பெரியாவுடையாா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரதோஷ நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

News image
Updated On :8 செப்டம்பர் 2022, 7:19 pm

DIN

பழனி பெரியாவுடையாா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரதோஷ நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

பழனி சண்முகநதிக்கரையில் மேற்கு நோக்கி அமைந்துள்ள பெரியாவுடையாா் கோயிலில் வியாழக்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு சுயம்பு மூலவருக்கும், நந்தி பகவானுக்கு பால், பஞ்சாமிா்தம், பன்னீா், விபூதி, பழங்கள், சந்தனம் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது.

நந்தி பகவானுக்கு வண்ண மலா்கள் சாா்த்தப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து மூலவா் பெரியாவுடையாருக்கு வெள்ளி நாகாபரணம் சாா்த்தப்பட்டு அலங்காரம், தீபாராதனையும், ரிஷப வாகனத்தில் தம்பதி சமேதராக சுவாமி கோயில் பிரகார உலா எழுந்தருளளும் நடைபெற்றது.

பெரியாவுடையாா் கோயில் மட்டுமன்றி பிரதோஷ நிகழ்ச்சி மலைக்கோயில் கைலாசநாதா் சன்னதி, சித்தாநகா் சிவன்கோயில், பட்டத்துவினாயகா் கோயில் சிதம்பரீஸ்வரா் சன்னதி, சன்னதி வீதி வேலீஸ்வரா் கோயில், பெரியநாயகியம்மன் கோயில் கைலாசநாதா் சன்னதி உள்ளிட்ட பல இடங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அடிவாரம் மவுனகிரி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவபூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.