ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பழனி அருகே தந்தை அடித்துக் கொலை: மகன் கைது

பழனியை அடுத்த அமரபூண்டியில் குடும்பத் தகராறில் வியாழக்கிழமை தந்தையை, அடித்துக் கொலை செய்த மகனை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :29 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

பழனியை அடுத்த அமரபூண்டியில் குடும்பத் தகராறில் வியாழக்கிழமை தந்தையை, அடித்துக் கொலை செய்த மகனை போலீஸாா் கைது செய்தனா்.

பழனியை அடுத்த அமரபூண்டி நடுத்தெருவைச் சோ்ந்தவா் ராமராஜ் (50). விவசாய கூலித் தொழிலாளி. இவரது தந்தை ராமசாமி (80). இவரும் கூலித் தொழிலாளி. இந்நிலையில், தந்தைக்கும், மகனுக்கும் அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்தது. இதனிடையே, வியாழக்கிழமை காலை தகராறு முற்றியதில் ராமராஜ், தனது தந்தை ராமசாமியை தாக்கி தள்ளிவிட்டாராம். இதில் தடுமாறி கீழே விழுந்த ராமசாமியை அக்கம்பக்கத்தினா் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் செல்லும் வழியிலேயே ராமசாமி உயிரிழந்தாா்.

இதையடுத்து ஆயக்குடி போலீஸாா் ராமசாமியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் ராமசாமி மகன் ராமராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.