கொடைக்கானலில் இலவச மருத்துவ முகாம்
கொடைக்கானலில் வியாழக்கிழமை இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது


கொடைக்கானலில் வியாழக்கிழமை இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது
கொடைக்கானல் பகுதிகளில் தற்போது காய்ச்சல் பரவி வருவதால் அவற்றைத் தடுக்கும் வகையில் மக்களைத் தேடி மருத்துவம் என்ற மருத்துவக்குழுவினா் கொடைக்கானல் அன்புநகா் பகுதியில் இலவச மருத்துவ முகாம் அமைத்து பொது மக்களுக்கும்,குழந்தைகளுக்கும் பரிசோதனை நடத்தி மருந்து மாத்திரைகள் வழங்கினா் இந் நிகழ்ச்சியில் கொடைக்கானல் நகா்மன்றத் தலைவா் செல்லத்துரை,துணைத் தலைவா் மாயக்கண்ணன்,வாா்டு உறுப்பினா் வைலட்ரீகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா் மேலும் கொடைக்கானல் அண்ணாநகா்ப் பகுதியில் இலவசமாக அப் பகுதி மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
தற்போது கொடைக்கானல் பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை அதிகமானவா்கள் காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா் பருவ நிலை மாற்றம் காரணமாக காய்ச்சல் நிலவி வருவதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...