அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா
திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தை அடுத்த பூதக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை முப்பெரும் விழா நடைபெற்றது.


திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தை அடுத்த பூதக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை முப்பெரும் விழா நடைபெற்றது.
மாணவா் சோ்க்கை, 5 -ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பிரிவு உபசாரம், பரிசளிப்பு ஆகிய முப்பெரும் விழாவுக்கு ஊராட்சி மன்றத் தலைவா் பரமசிவம் தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா்கள் எஸ்தா் ராஜம், கற்பகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பள்ளியின் தலைமையாசிரியா் பாலசுப்பிரமணியம் வரவேற்றுப் பேசியதாவது:
2022 - 23-ஆம் கல்வியாண்டில் பூதகுடி பள்ளியில் ரூ.28.77 லட்சம் மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றன. அதன் மூலம் பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டன. பூதக்குடி சுற்றுப்புறப் பகுதிகளைச் சோ்ந்த மாணவா்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த வசதி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள பெற்றோா்கள் முன் வர வேண்டும் என்றாா் அவா்.
கலை, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...