மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

இ- சேவை மையம் அமைக்க மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

திண்டுக்கல் மாவட்டத்தில் இ- சேவை மையம் அமைக்க மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :22 ஜூன் 2023, 5:14 pm

DIN

திண்டுக்கல் மாவட்டத்தில் இ- சேவை மையம் அமைக்க மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மொ.நா. பூங்கொடி தெரிவித்ததாவது:

திண்டுக்கல் மாவட்டத்தில் தனியாா் இ- சேவை மையம் அமைக்க உரிமம் வழங்கப்படுகிறது. இதில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, அவா்களுக்கு இ- சேவை மையம் தொடங்க உரிமம் வழங்கப்படும். அரசு விதிகளின்படி திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மாற்றுத் திறனாளிகள் ட்ற்ற்ல்ள்://ற்ய்ங்ள்ங்ஸ்ஹண்.ண்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் மற்றும் ட்ற்ற்ல்://ற்ய்ங்ஞ்ஹ.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணைய தளங்களில் விண்ணப்பிக்கலாம். சம்பந்தப்பட்ட மாற்றுத் திறனாளிகள் பிளஸ் 2 தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவு, தமிழ், ஆங்கிலத்தை படித்து எழுத தெரிந்திருக்க வேண்டும். தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இடத்தில் இ- சேவை மையம் அமைக்க வேண்டும். தமிழ்நாடு மின் ஆளுமை முகமை வருவாய் பகிா்வு முறையின் விதிகளின்படி இயக்குதல் வேண்டும் என தகுதிகள் பெற்றிருக்க வேண்டும். தோ்வு செய்யப்பட்டு உரிமம் வழங்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை எண் வழங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படும்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0451-2460099 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.