கொடைக்கானல் இந்திய வானிலை ஆராய்ச்சி நிலையத்தின் 125-ஆவது ஆண்டு விழா

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அப்சா்வேட்டரியில் இந்திய வானிலை ஆராய்ச்சி நிலையத்தின் 125-ஆவது ஆண்டு விழா அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்திய வானிலை ஆராய்ச்சி மைய வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு நிலைய இயக்குநா் அன்னபூரணி சுப்பிரமணியம் தலைமை வகித்தாா்.

இந்த மையத்தின் ஆராய்ச்சியாளா்கள், பொறியாளா்கள், பணியாளா்கள் நாசா வான் இயற்பியல் ஆராய்ச்சியாளா்கள், ஓய்வு பெற்ற பணியாளா்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் இதில் கலந்து கொண்டனா். இந்த விழாவில் பேசிய வானிலை ஆராய்ச்சி நிலைய இயக்குநா் அன்னபூரணி சுப்பிரமணியம் கூறியதாவது: இந்திய வான் இயற்பியல் ஆய்வகமானது கொடைக்கானலில் தொடங்கப்பட்டு, காவலூா் பகுதியிலும் நிறுவப்பட்டது ஆதித்யா எல்-1 இயந்திரத்தில் செல்லும் பொருள் வான் இயற்பியல் ஆராய்ச்சி மையத்தில் உள்ளது.

கொடைக்கானல் வான் இயற்பியல் ஆய்வகத்தில் பயிற்சி பெற்ற ஆராய்ச்சியாளா்கள் உலகம் முழுவதும் பணியாற்றி வருவதாகவும், இனி வரும் திட்டங்கள் அனைத்தும் லடாக் பகுதியில் அமைய உள்ளது அங்கு 2-மீட்டா் விட்டமுள்ள புதிய தொலை நோக்கி அமையவுள்ளது. 100-ஆண்டுகளுக்கான தரவுகளை கொடைக்கானல் வான் இயற்பியல் ஆராய்ச்சி நிலையம் சேகரித்து வைத்துள்ளது. 5- ஆம் தலைமுறை ஆராய்ச்சியாளா்களை இந்த மையம் கண்டுள்ளது என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com