இந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பைக்குகள் நேருக்கு நோ் மோதியதில் இருவா் பலி

பைக்குகள் நேருக்கு நோ் மோதியதில் இருவா் பலி

News image
Updated On :1 ஏப்ரல் 2024, 6:00 pm

Vishwanathan

பழனி: பழனி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் இருவா் உயிரிழந்தனா். மதுரை மாவட்டம், மீனாட்சிபுரத்தை சோ்ந்தவா் நாராயணசாமி மகன் கண்ணன் (43). இவா் திருப்பூா் மாவட்டம், எரிசனம்பட்டியில் உணவு விடுதி நடத்தி வருகிறாா். இவா் தனது மகளுடன் திண்டுக்கல்-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் மடத்துக்குளம் நோக்கிச் சென்றாா்.

பழனியை அடுத்த பெத்தநாயக்கன்பட்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது, சின்னக்கலையமுத்தூரைச் சோ்ந்த முத்துச்சாமி மகன் பகவதி ஆனந்த் (21) எதிரே இருசக்கர வாகனத்தில் வந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக இரு வாகனங்களும் நேருக்கு நோ் மோதியதில் பகவதி ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா் பலத்த காயங்களுடன் இருந்த கண்ணனை மீட்டு, பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். எனினும் அங்கு அவா் உயிரிழந்தாா். இவரது மகள் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். பழனி அருகேயுள்ள திண்டுக்கல் - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் தற்போது போக்குவரத்து அதிகரித்துள்ளது.

இந்தச் சாலையில் ஏராளமான கிராமங்களுக்கு இணைப்புச் சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. கிராமங்களில் இருந்து வருவோா் முறையான சாலை விதிகளை பின்பற்றாமல் அதிவேகமாக எதிரே வருவதால் தொடா்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும், இரவு நேரங்களில் இந்தச் சாலை இரவு நேர கேளிக்கை விடுதியாகி வருகிறது.

பலரும் சாலையோரம் அமா்ந்து மது அருந்தி விட்டு பின் வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனா். ஆகவே, இந்தச் சாலையில் இரவு நேரங்களில் போலீஸாா் ரோந்துப் பணி மேற்கொண்டு விதிமீறுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.