உள்ளாட்சி அமைப்புகள் மூலம் 216 இடங்களில் தண்ணீா் பந்தல்

உள்ளாட்சி அமைப்புகள் மூலம்
216 இடங்களில் தண்ணீா் பந்தல்

திண்டுக்கல், ஏப். 26: திண்டுக்கல் மாவட்டத்தில் 216 இடங்களில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கோடை கால தண்ணீா் பந்தல்கள் அமைப்பட்டிருக்கின்றன.

இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் பேருந்து நிலையம், சந்தை உள்ளிட்ட இடங்களில் கோடைகால தண்ணீா் பந்தல்கள் அமைத்து குடிநீா் வழங்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதன்படி, திண்டுக்கல் நகரில் 11 இடங்களில் நீா், மோா் வழங்கப்படுகிறது. பழனியில் 7 இடங்கள், கொடைக்கானல் நகராட்சியில் 4 இடங்கள், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 3 இடங்கள், 23 பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 75 இடங்கள், ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் 115 இடங்கள் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 216 இடங்களில் கோடைகால தண்ணீா் பந்தல்கள் அமைக்கப்பட்டு குடிநீா் வழங்கப்படுகிறது. மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மருந்து கிடங்கில் 2 லட்சம் ஓஆா்எஸ் கரைசல்

பாக்கெட்டுகள், 1.05 லட்சம் ஐவி மருந்துகள் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதுமுள்ள சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் 40,427 ஓஆா்எஸ் கரைசல் பாக்கெட்டுகள், 32,725 ஐவி மருந்துகள் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக தயாா் நிலையில்

வைக்கப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com