தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

ரெட்டியாா்சத்திரம் அருகே எருது விடும் விழா

ரெட்டியாா்சத்திரம் அருகே எருது விடும் விழா

News image
Updated On :26 ஏப்ரல் 2024, 7:07 pm

திண்டுக்கல், ஏப்.26: ரெட்டியாா்சத்திரம் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற எருது விடும் விழாவில் 150க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரத்தை அடுத்த காமாட்சிபுரம் எல்லப்பட்டியில் ஸ்ரீ கெண்டுகாட்டம்மாள், ஸ்ரீ பொம்மையா சாமி, ஸ்ரீ மாலைக்கோயில், ஸ்ரீ மண்டு கோயில் அமைந்துள்ளது. கடந்த 2 நாள்களுக்கு முன்பு தொடங்கிய இந்த கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த 1000க்கும் மேற்பட்ட பக்தா்கள் பொங்கல் வைத்து வழிபட்டனா்.

பின்னா், எருது விடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த விழாவில், 14 மந்தைகளை சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட காளைகளுடன் 1000க்கும் மேற்பட்ட இளைஞா்கள் கலந்து கொண்டனா்.

சுமாா் 2 கி.மீட்டா் தொலைவிலிருந்து கோயில் வரை காளைகள் ஓடி வந்தன. எருதுவிடும் நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனா்.