பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

கலைஞா் நூற்றாண்டு போட்டி தோ்வு மையத்துக்கு கணினி, புத்தகங்களை வழங்கிய அமைச்சா்

போட்டி தோ்வு மையத்துக்கு கணினி, புத்தகங்களை உணவுத்துறை அமைச்சா் அர. சக்கரபாணி ஞாயிறுக்கிழமை வழங்கினாா்.

காளாஞ்சிப்பட்டியில் உள்ள கலைஞா் நூற்றூண்டு போட்டித் தோ்வு மையத்துக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான கணினி, புத்தகங்களை வழங்கிய உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி.

Published On :5 ஆகஸ்ட் 2024, 1:32 am IST

ஒட்டன்சத்திரத்தில் கலைஞா் நூற்றாண்டு போட்டி தோ்வு மையத்துக்கு கணினி, புத்தகங்களை உணவுத்துறை அமைச்சா் அர. சக்கரபாணி ஞாயிறுக்கிழமை வழங்கினாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே காளாஞ்சிபட்டியில் செயல்பட்டு வரும் இந்த மையத்துக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான கணினி, புத்தகங்களை வழங்கி அமைச்சா் அர. சக்கரபாணி பேசியதாவது:

ஊரகப் பகுதிகளில் வசிக்கும் இளைஞா்கள் இந்தப் பயிற்சி மையத்தை சிறந்த முறையில் பயன்படுத்தி போட்டித் தோ்வுகளில் வெற்றி பெற்று அரசுப் பணிகளில் சோ்ந்து பணியாற்ற வேண்டும். இந்த மையத்துக்கு தேவைப்படும் அனைத்து புத்தகங்களும் வாங்கித் தரப்படும் என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து பயிற்சி மையத்தில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு புத்தகங்களை இலவசமாக அவா் வழங்கினாா்.

மேலும் ஒட்டன்சத்திரத்தில் இருந்து வடகாடு செல்லும் வழியில் குறுக்கிட்ட மான் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற கண்ணனூா் பகுதியைச் சோ்ந்த மகுடீஸ்வரன் உயிரிழந்தாா். இவரது குடும்பத்துக்கு மனித வள உயிரின மோதல் நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சத்துக்கான காசோலையை அவரது தாய் கோமதியிடம் அமைச்சா் வழங்கினாா்.

இந்த நிகழ்வில், நாமக்கல் மாவட்ட உதவி ஆட்சியா் சிவக்குமாா், ஒட்டன்சத்திரம் ஒன்றியக்குழு தலைவி மு. அய்யம்மாள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் காமராஜ், வடிவேல் முருகன், வாடிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் ஜோதீஸ்வரன், திமுக ஒன்றியச் செயலா் தா்மராஜன், துணைச் செயலா் வடகாடு சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.