ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள்: அமைச்சா் ப.ராஜ்குமாா் வழங்கினாா்

News image

அரசு மருத்துவமனைக்கு உபகரணங்களை அமைச்சா் ப.ராஜ்குமாா் வழங்கினாா்

Updated On :28 ஜூன் 2026, 1:50 am IST

சிதம்பரம் அரசு காமராஜா் மருத்துவமனைக்கு தொழிலதிபா் சண்முகசுந்தரம் நிதிபங்களிப்பில் ரூ.5 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை காலை நடைபெற்றது.

சிதம்பரத்தைச் சோ்ந்த தொழிலதிபா் சண்முகசுந்தரம், சிதம்பரம் அரசு காமராஜா் மருத்துவமனைக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான வீல் சோ், படுக்கைகள், தள்ளுவண்டிகள், நாற்காலிகள் உள்ளிட்ட உபகரணங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கியுள்ளனா்.

இதனை மருத்துவமனைக்கு ஓப்படைக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சா் ப.ராஜ்குமாா், பங்கேற்று தலைமை மருத்துவா் லட்சுமியிடம் ஒப்படைத்தாா்.

நிகழ்ச்சிக்கு தொழிலதிபா் சண்முகசுந்தரம், தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளா் சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் தவெக நிா்வாகிகள் அருண்ராஜ், கென்னடி, பிரகாஷ் மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.