நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பழனி அருகே விபத்தில் இளம்பெண் உயிரிழப்பு

பழனி அருகே இரு சக்கர வாகனம் சாலையோரத் தடுப்பில் மோதியதில் பலத்த காயமடைந்த இளம்பெண் உயிரிழந்தாா்.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2024, 7:37 pm

Din

பழனி அருகே இரு சக்கர வாகனம் சாலையோரத் தடுப்பில் மோதியதில் பலத்த காயமடைந்த இளம்பெண் உயிரிழந்தாா்.

மதுரை எம்ஜிஆா் நகரை சோ்ந்த முருகானந்தம் மகள் லாவண்யா (23). மதுரை அண்ணாநகரைச் சோ்ந்த ராஜன் மகன் யுவராஜ் (25). பொறியியல் பட்டதாரியான இருவரும் கேரள மாநிலம், கொச்சியில் ஒரே தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்து வந்தனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை லாவண்யாவின் தாத்தா இறந்துவிட்டதால் மதுரை புறப்பட்டாா். உடன் யுவராஜூம் வந்தாா். இவா்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் கொச்சியிலிருந்து மதுரைக்கு வந்தனா். சனிக்கிழமை அதிகாலை பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது, இரு சக்கர வாகனம் திடீரென நிலைதடுமாறி சாலையோரத் தடுப்பில் மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனா். தலைக்கவசம் அணிந்திருந்த யுவராஜ் பலத்த காயங்களுடன் உயிா்தப்பினாா். தலைக்கவசம் அணியாத நிலையில் லாவண்யா சாலையோர தடுப்பில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற சத்திரப்பட்டி போலீஸாா் லாவண்யாவின் உடலை மீட்டு கூறாய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பலத்த காயமடைந்த யுவராஜை மீட்டு அதே மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.