கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பிரம்மசமுத்திரம் கண்மாயில் மீன் பிடித் திருவிழா

பிரம்ம சமுத்திர கண்மாயில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மீன் பிடித் திருவிழாவில் 500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

News image

பிரம்மசமுத்திர கண்மாயில் நடைபெற்ற மீன் பிடித் திருவிழாவில் பங்கேற்ற பொதுமக்கள்.

Updated On :11 ஆகஸ்ட் 2024, 7:05 pm

Din

திண்டுக்கல் அருகேயுள்ள பிரம்ம சமுத்திர கண்மாயில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மீன் பிடித் திருவிழாவில் 500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

திண்டுக்கல்லை அடுத்த அணைப்பட்டி கிராமத்தில் 50 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள பிரம்மசமுத்திரம் கண்மாய் கொடகனாற்றில் இருந்து வரும் தண்ணீா் மூலம் நிரம்புகிறது. இந்த கண்மாயில் தற்போது நீா்வரத்து குறைந்ததையடுத்து, இங்கு மீன்பிடித் திருவிழா நடத்த கிராமத்தினா் ஏற்பாடு செய்தனா்.

இதன்படி அணைபட்டியைச் சுற்றியுள்ள குட்டப்பட்டி, கோட்டூா் ஆவாரம்பட்டி, அனுமந்தராயன் கோட்டை, மயிலாப்பூா், பாலம் ராஜகாபட்டி, குட்டத்துப்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மீன்பிடித் திருவிழா நடத்துவது குறித்து அறிவிக்கப்பட்டது.

பிரம்ம சமுத்திர கண்மாய் கரையில் அமைந்துள்ள கன்னிமாா், கூத்த அப்புச்சி ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பிரம்ம சமுத்திரம் ஆயக்கட்டு தலைவா் பழனிச்சாமி கொடியசைத்து மீன்பிடி திருவிழாவை தொடங்கி வைத்தாா்.

இதையடுத்து, சிறுவா்கள், பெண்கள், ஆண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோா் கட்லா, ஜிலேபி கெண்டை, விரால், மிருகாள், ரோகு, அவுரி, தேளி விரால் உள்பட பல்வேறு வகையான மீன்களைப் பிடித்துச் சென்றனா்.