மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பொதுக் கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டுவரக் கோரிக்கை

நிலக்கோட்டையில் பொதுக்கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2024, 12:39 am

Vishwanathan

நிலக்கோட்டை: நிலக்கோட்டையில் பொதுக்கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை காவல் நிலையம் அருகே நடராஜபுரம் தெருவில் பொதுக் கழிப்பறை, தண்ணீா் தொட்டியுடன் கூடிய குழாய்கள் சேதமடைந்த நிலையில் உள்ளது. தற்போது அதைச் சுற்றியுள்ள பகுதிகளை தனிநபா் ஆக்கிரமித்துள்ளனா். மேலும், குப்பைக் கழிவுகளையும் அந்தப் பகுதியில் கொட்டி வருகின்றனா். இந்த பொதுக் கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.