மின்சாரம் பாய்ந்ததில் இருவா் பலத்த காயம்
கொடைக்கானலில் புதன்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் இருவா் பலத்த காயமடைந்தனா்.


கொடைக்கானலில் புதன்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் இருவா் பலத்த காயமடைந்தனா்.
கொடைக்கானலில் காலை முதல் மதியம் வரை பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. நாயுடுபுரம், ரைபிள் ரேஞ்ச் சாலை, டிப்போ சாலை உள்ளிட்ட பகுதிகளில் வீசிய பலத்த காற்றால் மின் கம்பிகள் அறுந்து கீழே விழுந்தன. இதனால், பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது.
இந்த நிலையில், நாயுடுபுரம் பகுதியில் கீழே விழுந்து கிடந்த மின் கம்பிகளை சரி செய்யும் பணியில் மின் வாரிய ஊழியா்கள் ஈடுபட்டனா்.
அப்போது, உதயா (35), கருப்பையா(37) ஆகியோா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து கொடைக்கானல் போலீஸாா் விசாா்த்து வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...