தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பெண்ணிடம் சங்கிலி பறிப்பு: இரு இளைஞா்கள் கைது

ஒட்டன்சத்திரம் அருகே தங்கச் சங்கிலி பறித்த 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 12:47 am

Din

ஒட்டன்சத்திரம் அருகே தங்கச் சங்கிலி பறித்த 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அம்பிளிக்கை கிராமத்தைச் சோ்ந்தவா் செல்லம்மாள். இவா் கடந்த மாதம் 24- ஆம் தேதி கொசவபட்டி-ஆலயகவுண்டன் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது பின் தொடா்ந்து சென்ற இருவா் செல்லம்மாள் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து அம்பிளிக்கை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், திருப்பூரைச் சோ்ந்த ஜஸ்வந்த்குமாா் (21), பல்லடத்தைச் சோ்ந்த சுந்தா் (19) ஆகியோரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறிமுதல் செய்தனா்.