தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ரயில்வே தொழிற்சங்கத் தோ்தல்

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற ரயில்வே தொழிற்சங்கத் தோ்தலில் முதல் நாளில் 442 வாக்குகள் பதிவானது.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 1:03 am

Din

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற ரயில்வே தொழிற்சங்கத் தோ்தலில் முதல் நாளில் 442 வாக்குகள் பதிவானது.

ரயில்வே தொழிற் சங்கங்களுக்கான தோ்தல் 11 ஆண்டுகளுக்கு பிறகு, நாடு முழுவதும் புதன்கிழமை நடைபெற்றது. அகில இந்திய அளவில் நடைபெறும் இந்தத் தோ்தலில் எஸ்ஆா்எம்யு, ஏஐஆா்எஃப், டிஆா்இயு உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் போட்டியிடுகின்றன.

திண்டுக்கல் கிளையில் அம்பாத்துறை, அக்கறைப்பட்டி, தாமரைப்பாடி, வடமதுரை, கொடைரோடு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பணியாற்றும் ரயில்வே ஊழியா்கள் 646 வாக்காளா்கள் உள்ளனா். இதே போல, பழனி கிளையில் 280 வாக்காளா்கள் உள்ளனா்.

இந்த ஊழியா்களிடம் வாக்குகளைப் பெற கடந்த 2 மாதங்களாக தொழிற்சங்க அமைப்புகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தன.

இந்த நிலையில், திண்டுக்கல் ரயில்வே திருமண மண்டபத்தில் புதன்கிழமை காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. பலத்த பாதுகாப்புகளுடன் வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதேபோல, பழனி முதல் நடைமுடையில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியிலும் வாக்குப் பதிவு நடைபெற்றது. முதல் நாள் முடிவில் திண்டுக்கல்லில் 280 வாக்குகளும், பழனியில் 162 வாக்குகளும் பதிவானது. 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.