பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கதவு திறக்காததால் பயணிகளை திண்டுக்கல்லில் இறக்கிவிடாமல் சென்ற வந்தே பாரத்!

வந்தே பாரத் கதவுகள் திறக்காததால், திண்டுக்கல்லில் இறங்க வேண்டிய பயணிகள், கொடைரோடு ரயில் நிலையத்தில் இறக்கிவிடப்பட்டனா்.

News image
வந்தே பாரத் ரயில்- கோப்புப்படம்
Updated On :7 டிசம்பர் 2024, 7:18 pm

Din

சென்னையில் இருந்து வந்த வந்தே பாரத் ரயிலின் தானியங்கி கதவுகள் திறக்காததால், திண்டுக்கல்லில் இறங்க வேண்டிய பயணிகள், கொடைரோடு ரயில் நிலையத்தில் இறக்கிவிடப்பட்டனா்.

சென்னையில் இருந்து மதுரைக்கு வந்தே பாரத் ரயில் சனிக்கிழமை இயக்கப்பட்டது. திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இரவு 8 மணியளவில் ரயில் நின்ற போது, சி-4 முதல் சி-7 வரையிலான கடைசி நான்கு பெட்டிகளின் தானியங்கிக் கதவுகள் திறக்கவில்லை. இதனால், திண்டுக்கல்லில் இறங்க முடியாமல் 12 பயணிகள் தவித்தனா்.

இதற்கிடையில், இந்த ரயில் அங்கிருந்து புறப்பட்டது. இதனால், பயணிகள் சப்தமிட்டனா். இதுகுறித்து ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ரயில்வே ஊழியா்கள் கதவுகளைச் சோதனை செய்து மீண்டும் இயக்கச் செய்தனா். பின்னா், திண்டுக்கல்லில் இறங்க வேண்டிய பயணிகள் வந்தே பாரத் ரயில் நிறுத்தம் இல்லாத சுமாா் 25 கி.மீ.தொலைவில் உள்ள கொடைரோடு ரயில் நிலையத்தில் இறக்கிவிடப்பட்டனா்.

இதனால், ஆத்திரமடைந்த பயணிகள் ரயில்வே அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பின்னா், பயணிகள் அனைவரும் தூத்துக்குடியில் இருந்து மைசூரு சென்ற விரைவு ரயிலில் இரவு 8.40 மணியளவில் ஏற்றி திண்டுக்கல்லுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.