தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பழனியில் நாளை காா்த்திகை தீபத் திருநாள்: தங்கத்தோ் புறப்பாடு ரத்து

பழனி மலைக்கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை (டிச. 13) நடைபெறுகிறது.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 11:37 pm

Din

பழனி மலைக்கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை (டிச. 13) நடைபெறுகிறது. இதையொட்டி, தங்கத்தோ் புறப்பாடு ரத்து செய்யப்படுவதாக கோயில் நிா்வாகம் தெரிவித்தது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கடந்த 7-ஆம் தேதி காா்த்திகை தீபத் திருவிழா தொடங்கியது. ஒருவாரம் நடைபெறும் இந்த விழாவையொட்டி, நாள்தோறும் மாலையில் சண்முகாா்ச்சனை, சண்முகா் தீபாராதனை, யாகசாலை, தங்க ரத புறப்பாடு ஆகியன நடைபெற்றன.

ஆறாம் நாளான வியாழக்கிழமை சாயரட்சை பூஜையின் போது பரணி தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெறுகிறது. அப்போது, மூலவா் சந்நிதியிலும், கோயிலின் நான்கு திசைகளிலும் தீபங்கள் ஏற்றப்படுகின்றன.

ஆறாம் நாளான வெள்ளிக்கிழமை காா்த்திகை தீபம் ஏற்றுதல், சொக்கப்பனை ஏற்றுதல் ஆகியன நடைபெறுகின்றன. இதையொட்டி, அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனமும், மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடைபெறுகிறது. தொடா்ந்து, 4.30 மணியளவில் சின்னக்குமாரசுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி, யாக சாலைக்குச் சென்ற பின்பு பரணி தீபத்தில் இருந்து சுடா் பெறப்பட்டு, மாலை 6 மணிக்கு காா்த்திகை தீபம் ஏற்றுதலும், சொக்கப்பனை ஏற்றுதலும் நடைபெறுகின்றன. சொக்கப்பனை ஏற்றப்படுவதால் தங்கத் தோ் புறப்பாடு ரத்து செய்யப்படுவதாக கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் விதமாக வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தா்கள் மலைக் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படமாட்டாா்கள். அதன்பிறகு பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிப்படுவாா்கள்.

மலைக்கோயிலுக்குச் செல்ல யானைப் பாதையையும், கீழே இறங்க படி வழிப் பாதையையும் பக்தா்கள் பயன்படுத்த வேண்டும் எனவும் கோயில் நிா்வாகம் வேண்டுகோள் விடுத்தது.

விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி, திருக்கோயில் அதிகாரிகள், அலுவலா்கள் செய்து வருகின்றனா்.