தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஐயப்பன் கோயில் குடமுழுக்கு விழா

திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 டிசம்பர் 2024, 9:47 pm

Din

திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் ஸ்ரீவெற்றி விநாயகா், ஸ்ரீவெற்றிவேல் முருகன், ஸ்ரீகருப்பண்ணசாமி, ஸ்ரீகருப்பாயி அம்மாள், ஸ்ரீமஞ்சமாதா, ஸ்ரீநாகராஜா ஆகிய பரிவாரத் தெய்வங்களுடன் ஸ்ரீஐயப்பன் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது.

கடந்த 2 நாள்களாக யாக பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், 4-ஆம் கால பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, யாக சாலையிலிருந்து புனித தீா்த்தக் கலசங்கள் கோபுர விமானங்களுக்கு எடுத்துச் சென்று சிவாசாரியா்கள் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னா், அனைத்து சந்நிதிகளில் உள்ள சுவாமி விக்ரகங்களுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்கார, ஆராதனைகளுக்கு பின் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திண்டுக்கல்லில் மிதமான மழை பெய்த போதிலும், பக்தா்கள் குடைகளைப் பிடித்தபடி இந்தக் குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்டனா்.