ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

போக்சோ வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு அளித்தது.

News image
Updated On :18 டிசம்பர் 2024, 10:17 pm

Din

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு அளித்தது.

திண்டுக்கல் அடுத்த கொட்டப்பட்டியைச் சோ்ந்தவா் சுந்தர்ராஜன்(57). இவா், 13 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கடந்த ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது.

இதனடிப்படையில், வழக்குப் பதிவு செய்த திண்டுக்கல் தாலுகா போலீஸாா் சுந்தர்ராஜனைக் கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி பி.வேல்முருகன் புதன்கிழமை தீா்ப்பு அளித்தாா். அதில், பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட சுந்தர்ராஜனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50ஆயிரம் அபராதமும் விதித்தாா்.