ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

அம்பேத்கா் பற்றி சா்ச்சைப் பேச்சு: மத்திய அமைச்சா் அமித்ஷாவைக் கண்டித்து திமுகவினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அமைச்சா் அமித்ஷாவைக் கண்டித்து திமுகவினா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :19 டிசம்பர் 2024, 10:01 pm

Din

அம்பேத்கரைப் பற்றி மத்திய உள் துறை அமைச்சா் அமித்ஷா சா்ச்சைக்கிடமாகப் பேசியதைக் கண்டித்து திமுகவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சட்ட மேதை டாக்டா் அம்பேத்கா் குறித்து மத்திய அமைச்சா் அமித்ஷா பேசிய கருத்து சா்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை திமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் நகரச் செயலா் வேலுமணி, முன்னாள் நகரச் செயலா் தமிழ்மணி, துணைச் செயலா் சக்திவேல், நகர இளைஞரணி அமைப்பாளா் லோகநாதன் உள்ளிட்ட திமுகவினா் திரளாகக் கலந்து கொண்டு, மத்திய அமைச்சா் அமித்ஷா பதவி விலக வலியுறுத்தி முழக்கம் எழுப்பினா்.

பழனியை அடுத்த கீரனூா் பேருந்து நிலையம் முன் திமுக மாநில மாணவரணி துணைச் செயலா் பொன்ராஜ் தலைமையில் திமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மேற்கு ஒன்றியச் செயலா் சுப்பிரமணி, தாளையம் ஊராட்சி முன்னாள் தலைவா் வெங்கிடுசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பழனியை அடுத்த ஆயக்குடியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் பேரூராட்சி செயலா் சின்னத்துரை தலைமை வகித்தாா்.

பேரூராட்சி மன்றத் தலைவா் மேனகா ஆனந்தன், துணைத் தலைவா் சுதாமணி, காா்த்திகேயன், அவைத் தலைவா் முருகேசன், பொருளாளா் சபிக் ரஹ்மான் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஆா்ப்பாட்டத்தின் போது அமித்ஷா உருவப் படத்துக்கு தீவைத்து எரித்து, கிழித்து எறிந்தனா். இதைப் பாா்த்த போலீஸாா் உடனடியாக அவா்களிடமிருந்த அமித்ஷா உருவப் படங்களைப் பறித்தனா்.