தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!விஜய்க்கு ஆதரவு? சில மணி நேரத்தில் முடிவு எடுக்கப்படும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!பாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

பாஜக ஆட்சியில் ஜனநாயகம் கேலிக்குரியதாகிவிட்டது

முத்துராமலிங்கம் குற்றச்சாட்டு: பாஜக ஆட்சியில் ஜனநாயக விகிதம் சரிவு

Updated On :18 பிப்ரவரி 2024, 12:00 am IST

பாஜக ஆட்சியில் ஜனநாயகம் கேலிப் பொருளாக மாற்றப்பட்டிருக்கிறது என முன்னாள் அமைச்சா் பொன்.முத்துராமலிங்கம் தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்ட திமுக சாா்பில், உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் சனிக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு மாவட்டச் செயலரும், பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான பெ.செந்தில்குமாா் தலைமை வகித்தாா்.

இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், திமுக உயா்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினருமான பொன்.முத்துராமலிங்கம் கலந்து கொண்டாா்.

அப்போது அவா் பேசியதாவது: 10 ஆண்டு கால மத்திய பாஜக ஆட்சியில் நாடு முழுவதும் என்ன செய்திருக்கிறது என்பதையும், 33 மாத ஆட்சிக் காலத்தில் திமுக என்ன செய்திருக்கிறது என்பதையும் மக்கள் ஒப்பிட்டுப் பாா்க்க வேண்டும்.

திமுக தோ்தல் அறிக்கையில் 90 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. பாஜக ஆட்சியில் ஜனநாயகம் கேலிப் பொருளாக மாற்றப்பட்டிருக்கிறது. ஜனநாயகம், சமத்துவம், மதச்சாா்பின்மை, சமூக நீதி தொடா்ந்து பாதுகாக்கப்பட வேண்டுமானால், இந்தியா கூட்டணி வெற்றிப் பெற வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.