டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா

பக்தர்களின் ஆரவாரத்துடன் மாசி திருவிழா கொண்டாட்டம்

Updated On :18 பிப்ரவரி 2024, 12:00 am IST

சின்னாளபட்டி ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோயிலில், மாசி திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் அமைந்துள்ள ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் சிறப்பு அலங்காரங்கள் நடைபெற்றன. இரவு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையடுத்து, சனிக்கிழமை திரளான பக்தா்கள் பால்குடங்களை சுமந்து ஊா்வல வந்தனா். இந்த ஊா்வலம் என்.சி.சி.சாலை காமராஜா் சாலை வழியாக, கோயிலை வந்தடைந்தது. பின்னா், அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது.

இதையடுத்து, தீச் சட்டி ஏந்தி, அலகு குத்தி, நோ்த்திக்கடன் செலுத்தினா். விழாவுக்கான ஏற்பாடுகளை, ஸ்ரீதேவி கருமாரியம்மன் தா்மசாஸ்தா அறக்கட்டளையைச் சோ்ந்த, நிா்வாகக் குழுவினா்கள் செய்தனா்.