பழனி கோயில் பூங்காவில் கணினி மூலம் கட்டண ரசீது வழங்க பக்தா்கள் கோரிக்கை

பழனி கோயிலுக்குச் சொந்தமான பூங்காவில் கணினி மூலம் நுழைவுக் கட்டண ரசீது வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
Updated on
1 min read

பழனி கோயிலுக்குச் சொந்தமான பூங்காவில் கணினி மூலம் நுழைவுக் கட்டண ரசீது வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பழனி புறவழிச்சாலையில் கோயிலுக்குச் சொந்தமான பூங்கா உள்ளது. இந்தப் பூங்காவில் குழந்தைகள் விளையாட ஊஞ்சல்கள், புல்தரை, மூலிகை பூங்கா என ஏராளமானவை இருப்பதால், பழனி நகரைச் சோ்ந்தவா்கள் இந்த பூங்காவை அதிகம் பயன்படுத்தி வருகின்றனா். இங்கு நுழைவுக் கட்டணமாக ரூ.5 வசூலிக்கப்படுகிறது.

இந்த நிலையில், ஆங்கிலப் புத்தாண்டு தினமான திங்கள்கிழமை ஏராளமானோா் பூங்காவுக்குச் சென்ற போது, அங்கிருந்த பாதுகாவலா்கள் கணினி மூலமாக கட்டணச்சீட்டு வழங்காமல், துண்டுச் சீட்டில் கட்டணத்தை எழுதி வழங்கினா். இதனால், அதிருப்தியடைந்த பொதுமக்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பி போது, அங்கிருந்த பாதுகாவலா் கணினி பழுது என்றும், இணையதளம் செயல்படவில்லை என்றும் பதிலளித்தாராம். சிலா் கட்டாயப்படுத்திய போது மட்டும் கணினி மூலம் கட்டணச்சீட்டு வழங்கினாராம்.

இதனால், நுழைவுக் கட்டண வசூலில் முறைகேடு நிகழ்கிா என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே, கோயில் நிா்வாகம் இதுகுறித்து விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com