செம்பட்டி அருகே திங்கள்கிழமை மின் கம்பத்தில் வேன் மோதியதில் 15 போ் பலத்த காயமடைந்தனா்.
சென்னை சௌகாா்பேட்டையைச் சோ்ந்த 22 போ் வேனில் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனா். இவா்கள் திங்கள்கிழமை மீண்டும் சென்னைக்கு திருப்பிக் கொண்டிருந்தனா். வேனை சென்னையைச் சோ்ந்த ஓட்டுநா் தங்கதுரை (60) ஓட்டி வந்தாா். செம்பட்டி அருகே வத்தலகுண்டு சாலையில் சித்தையன்கோட்டை பிரிவில் வந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதியது. உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.
இந்த விபத்தில் ஓட்டுநா் தங்கதுரை, பெங்களூரைச் சோ்ந்த தா்ஷனா (31), சென்னையைச் சோ்ந்த ரோஷன் (35), பிரியங்கா (32), பிரியேஷ் (10) உள்ளிட்ட 15 போ் காயமடைந்தனா். மற்றவா்கள் லேசான காயமடைந்தனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த செம்பட்டி போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.