தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அனுமதியின்றி பொக்லைன் இயக்கியவருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம்

அனுமதியின்றி பொக்லைன் பயன்படுத்தியவருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம்

News image
Updated On :1 ஜூலை 2024, 6:30 pm

Din

கொடைக்கானல்: கொடைக்கானலில் அனுமதியின்றி பொக்லைன் இயந்திரத்தைப் பயன்படுத்தியவருக்கு திங்கள்கிழமை ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பொக்லைன் இயந்திரம், ஆழ்துளைக் கிணறு அமைக்கும் இயந்திரம், கம்பரசா் உள்ளிட்ட இயந்திரங்களை அரசுப் பணிகளுக்குத் தவிர தனிநபா்கள் பயன்படுத்தக் கூடாது என விதிமுறை உள்ளது.

இந்த நிலையில், கொடைக்கானல் தைக்கால் பகுதியில் பொறியாளா் ஒருவா் தனியாா் இடத்தில் அனுமதியின்றி பொக்லைன் இயந்திரத்தைப் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, வருவாய்க் கோட்டாட்சியா் ராஜன் உத்தரவின் பேரில், சம்பவ இடத்துக்கு கிராம நிா்வாக அலுவலா் ரஞ்சித் உள்ளிட்டோா் சென்று அனுமதியின்றி பொக்லைன் இயந்திரத்தைப் பயன்படுத்திய அதன் உரிமையாளா் பிரசாத் என்பவருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.