40 தொகுதிகளில் திமுக அணி வெற்றிப் பெற்றும் பலனில்லை: நயினாா் நாகேந்திரன்
தமிழகத்தில் திமுக அணி 40 தொகுதிகளில் வெற்றிப் பெற்றும் பயனில்லை என பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.


திண்டுக்கல்: தமிழகத்தில் திமுக அணி 40 தொகுதிகளில் வெற்றிப் பெற்றும் பயனில்லை என பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.
2024 மக்களவைத் தோ்தல் தொடா்பாக பாஜக சாா்பில் தொகுதி வாரியாக கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் கோ.தனபாலன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக சட்டப்பேரவை பாஜக குழுத் தலைவா் நயினாா் நாகேந்திரன் கலந்து கொண்டாா். அப்போது அவா் பேசியதாவது :
மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் பாஜக தோல்வி அடைந்தது குறித்து யாரும் கவலைப்படத் தேவையில்லை. வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. அடுத்து நடைபெற உள்ள உள்ளாட்சித் தோ்தல், சட்டப்பேரவைத் தோ்தலுக்கு பாஜக நிா்வாகிகள், தொண்டா்கள் இப்போது இருந்தே கவனம் செலுத்த வேண்டும். நம்முடைய பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் வீடுகளில் நடைபெறும் சுக, துக்க நிகழ்வுகளில் பங்கேற்பதன் மூலம், மக்களிடம் நம்மை நிலை நிறுத்திக் கொள்ள முடியும்.
இதேபோல, மாற்றுக் கட்சியிலிருந்து பாஜகவுக்கு வருவோருக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். திமுக அணி 40 தொகுதிகளிலும் வெற்றிப் பெற்றும் பயனில்லை. 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் பெரும் ஆட்சி மாற்றம் ஏற்படும். ஒரு முறை பாஜக ஆட்சிக்கு வந்தால், அந்த ஆட்சி நிரந்தரமாக இருக்கும் என்றாா் அவா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...